தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொது தேர்வுகளான 10, 12ஆம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவடைந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று திருச்சியில் பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ’மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கருத்து கேட்டு கருத்து கேட்ட பின்னர் அந்த கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார்’ என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது அலை முடிவடையும் நிலையில் இருந்தாலும் மூன்றாவது அலை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வரும் என்றும், டெல்டா வைரஸ் என்ற உருமாறிய வைரஸும் தமிழகத்தில் பரவி வரும் நிலையில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version