தமிழ்நாடு

1 முதல் 8ஆம் வகுப்புகள் பள்ளிகள் திறப்பு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இயல்பு வாழ்க்கையும் திரும்பி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் மாணவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகள் சென்று வருகின்றார்கள் என்பதும் தெரிந்ததே. அதேபோல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பதற்கான ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக முதல்வரிடம் அனுப்பி இருப்பதாகவும் தமிழக முதல்வரிடம் இருந்து இது குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version