தமிழ்நாடு

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடைபெறுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 1728 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அதேபோல் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 18 பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மாற்றப்பட்டது என்பதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் அளிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்த நிலையில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version