தமிழ்நாடு

பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை: அமைச்சர் அறிவித்த முக்கிய தகவல்கள்

Published

on

இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

* பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது!

* போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு தயாரித்து வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 – 22ம் நாள் வரை கடைபிடிக்கப்படும்.

* மாணவர்களுக்கு பள்ளிகளில் பாதுகாப்பாக கல்வி கற்கும் சூழலை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கவும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு.

* ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version