தமிழ்நாடு

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

Published

on

இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இருக்காது என ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தாமதமாக பள்ளி திறக்கப்பட்டது என்பதும், அதன் பின்னர் நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கும் மேலாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதனை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை இருக்காது என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து சற்றுமுன்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதன்படி தமிழகத்தில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வழக்கம்போல் இந்த ஆண்டும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version