தமிழ்நாடு

இனி CPUவை பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லலாம்: திருவாரூர் சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Published

on

திருவாரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவர் கையடக்க CPU ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது என்பது இதன் சிறப்பாகும்

கம்ப்யூட்டர்களில் உள்ள CPU மிகவும் முக்கியமான பாகம் என்பதும் இந்த பாகம் கொஞ்சம் பெரியதாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திருவாரூரைச் சேர்ந்த சிறுவன் மாதவ் என்பவர் கையடக்க மினி CPU ஒன்றை செய்துள்ளார். மும்பையில் இருந்து இதற்கான பாகங்களை வரவழைத்து இவர் இந்த CPU செய்துள்ளார்

இதுவரை 20 முறை CPU செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் 20 முறையும் தோல்வியில் முடிந்ததாகவும் 21வது முறை வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த CPUக்கு அவர் காப்புரிமை பெற்று உள்ளார் என்பதும் இதனை அவர் அரசின் அனுமதியுடன் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இவர் வேறு சில உபகரணங்களையும் கண்டுபிடித்து உள்ளதால் அந்த உபகரணங்களை விற்பனை செய்வதற்கென்றே தனியாக ஒரு இணையதளத்தைத் தொடங்கி அதன் மூலம் விற்பனை செய்து வருகிறார். மேலும் திருவாரூரில் ஒரு கடையும் ஓபன் செய்து அந்த மூலம் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கும் அவர் CPU சப்ளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததை அடுத்து விடுமுறை நேரத்தில் இந்த CPUவை தான் கண்டுபிடித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த CPU அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மிகக் குறைந்த விலையில் தான் இருப்பதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது தற்போது விண்டோஸ் ஓஎஸ்க்கு இணையான ஒரு ஓஎஸ் கண்டுபிடிக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் மாதவ் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version