தமிழ்நாடு

பெட்ரோல், டீசல், கேஸ், தங்கம் அடுத்து மினரல் வாட்டர் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து கொண்டே வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர் என்பதும் குறிப்பாக டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உள்பட பெருநகரங்களில் நடுத்தர வர்க்கத்தினர் கூட பயன்படுத்தும் மினரல் வாட்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை மினரல் வாட்டர் கேன்கள் சென்னையில் 30 முதல் 35 ரூபாய் வரை ஏரியாவுக்கு தகுந்த மாதிரி விற்பனையாகி கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி விலை அதிகரித்ததன் காரணமாக குடிநீர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மினரல் வாட்டர் என்பது இப்போது அடிப்படை தேவை என்ற நிலை ஆகிவிட்ட நிலையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகக் குழுவினர் மினரல் வாட்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 1500க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பாட்டில்கள், மூடிகள், பேக்கிங் பொருள்கள் ஆகியவை அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாகவும் இதன் காரணமாக மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் தண்ணீர் பாட்டிலின் விலை தண்ணீர்  விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குடிநீர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதனை அடுத்து 25 லிட்டர் மினரல் வாட்டர் கேனின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது/ 25 லிட்டர் கேன் மட்டுமின்றி 300 மில்லி லிட்டர் தண்ணீர் பாட்டில் முதல் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வரை அனைத்துமே விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ள நிலையில் தற்போது மினரல் வாட்டர் விலை உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Trending

Exit mobile version