வணிகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

Published

on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளை சார்ந்த ஊழியர்களைப் பாதித்துள்ளது.

பணி நீக்கம் குறித்து நிறுவனத்தின் ஒரு திட்டக் குழு தலைவர், தனது குழு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “எங்கள் குழு இனி மைக்ரோசாஃப்ட் வணிகங்களுக்கு இனி அவசியமில்லை” என்று நிறுவனம் கூறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பணி நீக்கங்கள் தொழில்நுட்ப துறையில் நிலவி வரும் வேலை இழப்பு போக்கின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப துறை ஊழியர்கள் பணி இழந்துள்ளனர்.

சென்ற ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version