சினிமா செய்திகள்

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தில் மைக் மோகன்?

Published

on

விஜய் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது என கூறுகின்றனர்.

தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டது. விஜய்க்கு ஜோடியாக ராஹ்மிகா மந்தனாவும், அப்பாவாக சரத்குமார் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு 2 அண்ணன்கள் உள்ளார்களாம். அதற்காகத் தெலுங்கிலிருந்து ஒரு நடிகரையும், தமிழிலிருந்து ஒரு நடிகரையும் தேடி வருகிறார்களாம்.

அதற்காக புது முகங்கள் யாரும் வேண்டாம் எனவும், 80, 90’ ஸ் நடிகர்களை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் மைக் மோகன் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தெலுங்கிலிருந்து யார் அண்ணனாக நடிப்பார்கள் என தெரியவில்லை.

முதல் முறையாக தமன் விஜய் படத்துக்கு இசையமைக்க உள்ளார். இது நேரடி தெலுங்கு படமா என விஜய்யிடம் கேட்டதற்கு இது நேரடி தமிழ் படம் என அண்மையில் அளித்த பேட்டியில் அவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் வம்சி ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்ற தோழா படத்தை இயக்கியவர் என்பதும் தெலுங்கு திரையுலகின் முக்கிய தயாரிப்பாளரான தில் ராஜ் இந்த படத்தை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version