சினிமா செய்திகள்

ஒரே நாளில் வெற்றி விழாவை கொண்டாடிய மகரிஷி படக்குழு!

Published

on

தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் நேற்று வெளியான மகரிஷி படத்தின் வெற்றி விழாவை இன்றே கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். சமூக வலைதளத்தில் அதன் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர்.

தயாரிப்பாளர் தில் ராஜு இயக்கத்தில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நேற்று வெளியான படம் மகரிஷி. மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

விஜய்யின் கத்தி, சர்கார் படங்களின் கலவையாக வெளியான மகரிஷி படத்திற்கு டோலிவுட்டில் முதல் நாளே பயங்கர வரவேற்பு மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

முதல் வாரம் கூட பொறுக்காத படக்குழு இன்றே படத்தின் வெற்றியை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தில் மகேஷ் பாபு கலந்து கொள்ளவில்லை. நாயகி பூஜா ஹெக்டே, தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் தயாரிப்புத் தரப்பு கலந்து கொண்டது.

seithichurul

Trending

Exit mobile version