சினிமா செய்திகள்

மெய்சிலிர்க்க வைக்கும் பேரன்பு டிரைலர்!

Published

on

’கற்றது தமிழ்’ ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா நடிப்பில் உருவாகியுள்ள பேரன்பு படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

திரைக்கு வரும் முன்னே பல சர்வதேச விருதுகளை அள்ளிய பேரன்பு, அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. டிரைலரின் முதல் காட்சியில் மலையாள சினிமா உலகின் சூப்பர்ஸ்டாரான மம்மூட்டி அறை வாங்குவதில் இருந்தே படம் எத்தனை ஆழமானது என தெரிகிறது.

மாற்றுத் திறனாளி பாப்பாவாக தங்கமீன்கள் சாதனா மாறுபட்ட நடிப்பால் மிரட்டியுள்ளார். ஆசிரியையாக வரும் அஞ்சலி, மீண்டும் கற்றது தமிழ் அஞ்சலியாகவே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

யுவன் சங்கர் இசையில் வெளியான செத்துப்போச்சு மனசு பாடல் பல மனங்களை ஏற்கனவே வருடி வருகிறது. நிச்சயம் இந்த பேரன்பு பேரன்பை மக்கள் மத்தியில் பொழியும் என நம்புகிறோம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version