தமிழ்நாடு

41வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!

Published

on

கடந்த 88 ஆண்டுகளில் 41வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளதை அடுத்து 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நெருங்கி வந்தன என்பதும் ஒரு சில ஏரிகள் மற்றும் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது 41 ஆவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை இன்று அதிகாலை எட்டியுள்ளது என்றும், அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

சுரங்க மின் நிலையம் மூலமாக 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரிநீர் வகையில் 2200 கன அடியும் திறந்து விடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதும் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு இடம் மாறி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட 88 ஆண்டுகளில் 41வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version