தமிழ்நாடு

ஒசூர் – பெங்களூர் இடையே மின்சார சேவை துவக்கம்!

Published

on

ஒசூர் – பெங்களூர்  இடையே மின்சார ரயில் சேவை  புதிய கால அட்டவணைப்படி தொடங்கியது.

கடந்த  நவம்பர் 5ஆம் தேதி ஒசூர் – பெங்களூர்  இடையே மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், புதிய கால நேரத்தில் மின்சார இரயிலை இயக்க முடிவு எடுத்தது.

அதன்படி, திங்கட்கிழமை காலை புறப்பட்ட  மெமூ மின்சார ரயில் ஒசூர் ரயில்நிலையம் வந்தடைந்தது. பையப்பனஹல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் மதிய வேளையில் ஒசூர் ரயில் நிலையம் வந்தடையும். இதற்கான கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது. பேருந்து கட்டணத்தை காட்டிலும் இந்த தொகை மிககுறைவு ஆகும். கல்வி மற்றும் பணி நிமித்தமாக பயணம் செய்பவர்களுக்கு இந்த புதிய ரயில் சேவை மிகவும் பயன் அளிக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version