தமிழ்நாடு

10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து சென்னையில் உள்ளவர்கள் தங்களுடைய சொந்த ஊர் செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் அனைத்து நகரங்களுக்கும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சென்ட்ரல் எழும்பூர் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் செல்வதற்கும் விமான நிலையம் செல்வதற்கும் பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாளை சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்கு மெட்ரோ ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version