இந்தியா

பாஜக முதல்வர் வேட்பாளர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Published

on

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுவை ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்து சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த மெட்ரோ ஸ்ரீதரன் தான் கேரள மாநில பாஜக முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மெட்ரோ ஸ்ரீதரன் பாஜகவில் இணையும் போதே முதல்வர் பதவி கொடுத்தால் அதனை ஏற்க தயார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவிலும் தமிழகத்தை போலவே ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் மொத்தம் 140 தொகுதிகளில் இருக்கும் நிலைகளில் 70 தொகுதிகளுக்கும் அதிகமாக பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்பதும் பாஜக 71 தொகுதிகளைப் பெற்று மெட்ரோ ஸ்ரீதரனை முதல்வராக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version