வணிகம்

மெத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்க மத்திய அரசு முடிவு… விலை குறையுமா?

Published

on

மத்திய அரசு மெத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பதற்கான பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் போது 10 சதவீதம் வரை விலை குறையும். 30 சதவீதம் வரை காற்று மாசு குறையும். மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 5000 ரூபாய் சேமிப்பு கிடைக்கும்.

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்காரி, மெத்தனால் காலக்கப்பட்டு பெட்ரோல் விற்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது இந்தியாவில் பெட்ரோலுடும் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய 42 ரூபாய் செலவாகிறது. இதுவே மெத்தனால் தயாரிக்க வேண்டும் என்றால் லிட்டர் ஒன்றுக்கு 20 ரூபாய் மட்டும் தான் செலவாகும்.

இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கனவே M15 என அழைக்கப்படும், 15 சதவீதம் மெத்தனால், 85 சதவீதம் பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருள் உற்பத்தி செய்து தயாரித்துப் பயன்படுத்தியும் வருகிறது.

மத்திய அமைச்சகம் M15, M85 மற்றும் M100 கலப்பட எரிபொருள் விற்பனைக்கான ஒழுங்குமுறை தரநிலைகளைத் தயாரித்துள்ளது.

பெட்ரோலில் 15 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டு 65000 கிலோ மீட்டர் வரையிலான வாகன பயண சோதனையும் நிதி ஆயோக் உறுப்பினர் விகே.சரஸ்வத் தலைமையில் நடைபெற்றுள்ளது. இப்படி கலப்பட பெட்ரோல் விற்பனை செய்வதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய அரசுக்கு 7 லட்சத்து 114 ஆயிரத்து 250 கோடி ரூபாய் என்றும் நிதி ஆயோக் கூறுகிறது.

சர்வதேச அலவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு 2,900 லிட்டர் பெட்ரோல் மற்றும் 9 ஆயிரம் லிட்டர் டீசல் இறக்குமதியை இந்திய அரசு செய்கிறது.

அசாம் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 100 டன் மெத்தனால் தயாரிக்க முடியும். இதுவே ஏப்ரல் 2020-ம் ஆண்டுக்குள் 600 டன்னாக அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

நிலக்கரியிலிருந்து மெத்தனால் தயாரிக்கும் பணிகள் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் செய்யப்பட்டு வருகின்றன.

இப்படி பல்வேறு வகையில் மெத்தனால் உற்பத்தி செய்யப்பட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் உடன் பயன்படுத்தும் போது, இந்தியாவின் இறக்குமதி செலவு குறைந்து, உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, பொருளாதாரம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வளவு குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version