இந்தியா

வரலாறு காணாத மழை: ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Published

on

டெல்லியில் வரலாறு காணாத மழை இன்று பெய்ததையடுத்து மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. ஆனால் டெல்லி உள்பட ஒரு சில வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும், பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர் என்பதும், ஏராளாமான பொருட்சேதமும் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் பிறந்த இன்றைய முதல் நாளிலேயே டெல்லியில் வரலாறு காணாத மழை பதிவாகி உள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒருநாள் மழை அளவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து டெல்லியில் ஆரஞ்ச் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியமான காரணம் இருந்தால் மட்டும் வெளியே வரவேண்டும் என்று மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மற்றும் கடைகளில் வெள்ள நீர் புகுந்தது ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version