உலகம்

பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியருக்கு ஒரு மாதம் கழித்து வந்த பார்சல்.. என்ன இருந்தது தெரியுமா?

Published

on

பேஸ்புக் நிறுவனத்தை கொண்ட மெட்டா நிறுவனம் சமீபத்தில் 11 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது என்பதும் இதன் காரணமாக வேலையில் விட்டு நீக்கப்பட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அந்த 11,000 ஊழியர்களில் பாதி பேர் கூட மீண்டும் வேறு வேலை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவருக்கு மெட்டா அலுவலகத்திலிருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனக்கு வந்த அட்டை பெட்டி பார்சலில் ’சோகம்’ மற்றும் ’வாவ்’ ஆகிய இரண்டு எமோஜிகள் மட்டும் இருந்ததாகவும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் அதை தவிர வேறு எந்த பரிசு பொருளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மெட்டா நிறுவனத்திடம் இருந்து பார்சல் வந்ததும் தான் மிகவும் ஆச்சரியம் அடைந்ததாகவும் உள்ளே என்ன இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் உள்ளே பேக்கிங் பொருட்கள் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை அறிந்து தான் மிகவும் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் கூறினார்.

இரண்டு இமோஜிகல் மட்டும் கொண்ட இந்த பார்சலை தனக்கு அனுப்பி உள்ளதற்கு அவர் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார். இந்த பதிவுக்கு டுவிட்டர் பயனாளிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து அந்த நபருக்கு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

மெட்டா போன்ற ஒரு பெரிய நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் அவர்களின் துயரத்தை மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில் இப்படி ஒரு பார்சலை அனுப்பி உள்ளதாக சிலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்திருந்தனர். இருப்பினும் இதுபோன்ற பார்சல் வேலை நீக்கம் செய்யப்பட்ட மற்ற ஊழியர்களுக்கும் வந்ததா என்பது குறித்து தெரியவில்லை என்றும் அந்த நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version