உலகம்

ட்விட்டர் பாணியில் ஃபேஸ்புக் .. புளுடிக் பெற எவ்வளவு கட்டணம்? மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு..!

Published

on

ட்விட்டர் பாணியில் கட்டணம் செலுத்தி புளுடிக் பெற்றுக் கொள்ளலாம் என ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் சமூக வலைதளத்தை பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கினார் என்பதும் அதன் பிறகு அவர் அதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக மூன்று விதமான டிக்குகளை அவர் அறிமுகம் செய்தார் என்பதும் குறிப்பாக ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் பெறப்பட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ஏராளமான தனிப்பட்ட ட்விட்டர் பயனர்கள் நிறுவனங்களின் பயனர்கள் தற்போது கட்டணம் செலுத்தி ப்ளூ டிக்குகளை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ட்விட்டரை அடுத்த பேஸ்புக்கிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பயனர்கள் தங்களுடைய கணக்குகளை சரி பார்க்க அனுமதிக்கும் கட்டண சேவை ப்ளுடிக் தொடங்க உள்ளதாகவும் 11.99 டாலரில் தொடங்கும் இந்த சேவை முதலில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என்றும் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்த வசதியை பெறுவதற்கு அரசு ஐடி கணக்கு சரிபார்க்கப்படும் என்றும் நீல நிற டிக் பெற்று நீங்கள் உங்களுடைய கணக்கை உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் போலியான கணக்குகளில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேல் உள்ள பயனர்கள் இந்த டிக் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீலநிற டிக் நீங்கள் பெறுவதன் மூலம் உங்கள் கணக்கு ஒரு தனிப்பட்ட கணக்காக இருக்கும் என்றும் ஆள் மாறாட்ட மட்டும் போலி கணக்குகள் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தால் ஏற்கனவே உள்ள வெரிஃபைடு திட்டத்தில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் இந்த சேவை இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனம் போலவே கட்டணம் செலுத்தி ப்ளூடூத் பெற்றுக் கொள்ளும் வசதி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வசதி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.

seithichurul

Trending

Exit mobile version