உலகம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த சுற்று வேலைநீக்கம்.. இம்முறை இந்தியர்களுக்கு அதிக பாதிப்பா?

Published

on

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே கடந்த ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அடுத்த சுற்று வேலை நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதும் குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு 11000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்றும் அதில் இந்தியர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது வரவு செலவு திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மேலும் சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்யலாம் என முன்னணி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மேலாளர் உள்பட ஒரு சில பணியில் இருப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் ஊழியர்கள் குறைப்பு குறித்த நடவடிக்கை இருக்கலாம் என்றும் நிறுவனத்தின் முதலீடுகளை அதிகப்படுத்தவும் சிக்கன நடவடிக்கை எடுக்கவும் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும் என்றும் அதில் வேலை நீக்க நடவடிக்கையும் இருக்கும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் பொருத்தவரை ஊழியர்கள் குறைப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 11 ஆயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது அச்சத்துடனை பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் சில ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எவ்வளவு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறித்த தகவல் இப்போது இல்லை என்றாலும் கூடிய விரைவில் அது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முறை வேலைநீக்க நடவடிக்கையில் சுமார் 400 இந்தியர்கள் வேலையிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது என்று என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version