வணிகம்

பேஸ்புக்கில் இருந்து விலகி ஸ்னாப்பில் இணையும் அஜித் மோகன்.. யார் இவர்?

Published

on

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்தியா தலைவர் பதவியிலிருந்து வியாழக்கிழமை பதவி விலகிய அஜித் மோகன் ,விரைவில் ஸ்னாப் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு ஏற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என சமீபத்தில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்தார்.

இப்போது மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக 2019-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அஜித் மோகன் ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்னாப்

மெட்டா இந்தியா நிறுவனத்திலிருந்து வெளியேறும் அஜித் மோகன் போட்டோ பகிர்வு ஆப்பான ஸ்னாப்பில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். ஸ்னாப் நிறுவனத்துக்கு இந்தியா 3-ம் மிகப் பெரிய சந்தையாக உள்ளது. எனவே இங்கு மேலும் வருவாயை ஈட்ட அஜித் மோகனை முக்கிய பதவிக்கு ஸ்னாப் அழைத்துள்ளது.

அதிரடி திட்டங்கள்

இந்தியாவின் டைர் 2 மற்றும் டையர் 3-ம் கட்ட நகரங்களில் தங்களது செயலியைப் பிரபலப்படுத்து பல்வேறு உள்ளடக்கங்களை உருவாக்க உள்ளது ஸ்னாப். அதற்காக உள்ளூர் உள்ளடக்க உருவாக்குநர்களைக் கண்டறிய ஏஜென்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை ஸ்னாப் தீட்டியுள்ளது.

அஜித் மோகன்

மெட்டா இந்தியாவின் தலைவராக அஜித் மோகன் இருந்த போது பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் செயலிகளில் 200 மில்லியன் பயனர்களை ஈர்த்துள்ளார். இப்போது இவர் வருகை மூலமாக ஸ்னாப் பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?

அஜித் மோகன் மெட்டா இந்தியாவிலிருந்து விலகி வேறு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பேற்க உள்ளார் என்பதை, மெட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் நிக்கோலா மெண்டசன் உறுதி செய்துள்ளார். மேலும் அஜித் மோகன் மெட்டாவில் இருந்து காலத்தில் இந்திய செயல்பாடுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை மெட்டா பெற்றது. அவர் விலகினாலும் இந்திய வணிகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அஜித்தின் பங்களிப்புக்கு நன்றி மற்றும் அவரது எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

ஹாட் ஸ்டார்

மெட்டாவில் சேரும் முன்பு அஜித் மோகன் ஹாட் ஸ்டார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். அவர் மெக்கின்சி மற்றும் நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அங்கு அவர் உலகம் முழுவதும் உள்ள ஊடக நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version