உலகம்

மெஸ்சி துடைத்து போட்ட டிஷ்யூ பேப்பர் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம்? டி.என்.ஏ எடுக்க திட்டமா?

Published

on

பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி தனது கண்ணீரை துடைத்து போட்ட டிஷ்யூ பேப்பர் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் போய் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த டிஷ்யூ பேப்பரில் இருந்து மெஸ்சியின் டிஎன்ஏவை எடுக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 17 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த மெஸ்சி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாதால் அந்த அணியில் இருந்து விலகினார். பிரிவு உபச்சார விழாவின்போது மெஸ்சி கண்ணீர் வடித்து பேசினார் என்பதும் அப்போது அவர் கண்ணீரை துடைப்பதற்காக பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் தற்போது ஏலம் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது, இந்த டிஷ்யூ பேப்பர் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளதாக அர்ஜெண்டினாவை சேர்ந்த பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில் மெஸ்சி கண்ணீரை துடைத்து போட்ட டிஷ்யூ பேப்பரில் இருந்த அவருடைய டிஎன்ஏவை எடுத்து குளோனிங் முறையில் பல மெஸ்சிக்களை உருவாக்க பார்சிலோனா அணி திட்டமிட்டுள்ளதாகவும் வதந்தி ஒன்று பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் டிஷ்யூ பேப்பர் ஏலம் போனதாக பார்சிலோனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிஷ்யூ பேப்பரை எடுத்து சென்றதாகவும் அந்த நபரிடம் இருந்து வேறு தகவல் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை உண்மையாகவே மெஸ்சியின் டிஷ்யூ பேப்பர் ஏலம் விடப்பட்டிருந்தால் மெஸ்ஸி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version