தொழில்நுட்பம்

க்ளப்ஹவுஸ் தளத்தில் புதிய மெசேஜிங் சேவை… இளைஞர்களைக் கவருமா?

Published

on

க்ளப்ஹவுஸ் செயலியில் புதிதாக மெசேஜிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவை இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்றே கூறப்படுகிறது.

ஆடியோ வசதிகள் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் சமுக வலைதளமாக மிகக் குறைவான நேரத்தில் பிரபலமான செயலி தான் க்ளப்ஹவுஸ். தற்போது ஆடியோ முறையில் மட்டுமல்லாது டெக்ஸ்ட் வடிவிலான மெசேஜ் சேவையையும் க்ளப்ஹவுஸ் தொடங்கி உள்ளது. ஆடியோ கருத்துப் பரிமாற்றம் என்னும் புதிய அம்சத்தின் மூலமாகப் பிரபலமான செயலி ஒன்றில் டெக்ஸ்ட் வடிவ சேவை வெற்றி பெறுமா என்ற கேள்விகளும் சமுக வலைதளங்களில் உலவி வருகின்றன.

அரட்டை செயலியில் இனி டெக்ஸ்ட் மெசேஜ் செய்ய முடியும் என்பது சிலரால் கூடுதல் ப்ளஸ் ஆகவே பார்க்கப்படுகிறது. ‘பேக் சேனல்’ என இந்த டெக்ஸ்ட் மெசேஜ் சேவைக்குப் பெயரிட்டுள்ளது க்ளப் ஹவுஸ். இந்த சேவையின் மூலம் உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் டெக்ஸ்ட் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ளலாம். லிங்க் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், இந்த செயலி மூலம் புகைப்படம் அல்லது வீடியோக்களைப் பகிர முடியாது.

Trending

Exit mobile version