தமிழ்நாடு

தமிழிசை அக்கா பப்ளிசிட்டி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. சர்கார் கண்டிப்பா ஹிட்டுதான்!

Published

on

சென்னை: சர்கார் படம் அரசியல் பேசும் படம் என்பதால் இந்த முறையும் தமிழக பாஜக தலைவர்கள் அந்த படத்தை பற்றி பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றபடியே சர்கார் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது  முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும் நிஜத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று தமிழிசை கூறியுள்ளார்.

மேலும் கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என்று விஜய் குறித்தும் சர்கார் குறித்தும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் சர்காருக்கு பாஜக கட்சி பப்ளிசிட்டி செய்யும் என்றே நெட்டிசன்கள் கருதுகிறார்கள். இந்த படத்தில் அரசியல் விஷயங்கள் நிறைய இருப்பதால் தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் சர்கார் படத்தை விமர்சனம் செய்வார்கள் என்று கூறுகிறார்கள்.

அதற்கு ஏற்றபடியே தமிழிசையும் தற்போது சர்கார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். நாளை படம் ரிலீஸ் ஆன பின்பே இவர்களின் நிலைப்பாடு தெரியவரும்.

 

 

 

Trending

Exit mobile version