உலகம்

மாதவிடாய் வலியால் தோல்வி அடைந்த டென்னிஸ் வீராங்கனை: ஆணாக பிறக்க விரும்புவதாக பேட்டி

Published

on

மாதவிடாய் வலி காரணமாக தோல்வியடைந்ததாக டென்னிஸ் வீராங்கனை ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், இனிமேல் ஆணாகப் பிறக்க விரும்புகிறேன் என பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சீனாவை சேர்ந்த ஜிங் ஜென்வன் என்பவர் தோல்வியடைந்தார்.

முதல் சுற்றிலேயே அவர் தோல்வி அடைந்ததது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தோல்விக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜிங் ஜென்வன் இந்த போட்டியின் போது தனக்கு மாதவிடாய் வலி இருந்ததாகவும் அதன் காரணமாக தன்னால் சரியாக விளையாடவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நான் ஆணாக பிறக்க விரும்புகிறேன் என்றும் அப்படி ஆணாக பிறந்தால் தான் மாதவிடாய் வலியால் அவதிப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version