இந்தியா

மேஹூல் சோக்ஸியை ஆனிடிகுவாக்கு அனுப்பிவிட்டு காங்கிரஸ் மீது பழியை போட்ட பாஜக!

Published

on

வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சொக்ஸி இருவரும் 13,000 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி மோசடி செய்து பிறகு தலைமறைவாக உள்ளனர். இவர்களைத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேஹூல் சோக்ஸிக்கு சென்ற ஆண்டு ஆன்டிகுவா குடியுரிமை பெற பாஜக அரசு அனுமதி அளித்து இருப்பது தெரியவந்துள்ளது.

நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் மோடியின் நெருங்கிய நண்பர்கள் என்று எதிர் கட்சியான காங்கிரஸ் விமர்சித்து வரும் நிலையில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்குச் சென்ற ஆண்டு ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது சந்தேகத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இதில் வேடிக்கை என்ன என்றால் சென்ற வருடம் ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற மேஹூல் சோக்ஸி 2018 ஜனவரி மாதம் அங்குக் குடிபெயர்ந்த நிலையில் பிப்ரவரி மாதம் நீரவ் மோடி மற்றும் மேஹூல் சொக்ஸி இருவரும் 13,000 கோடி மோசடி செய்துள்ளார்கள் என்று வழக்கு தொடரப்பட்டதே ஆகும்.

இந்தியாவில் 13,000 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளவர்களுக்கு எப்படி வெளிநாட்டுக் குடியுரிமை பெற மத்திய அரசு அனுமதி அளித்தது என்பது அரசியல் வட்டாரத்தில் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version