உலகம்

பம்ப் இல்லை.. வேலை நடக்காது.. மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 14 பேரை மீட்கும் பணி நிறுத்தம்!

Published

on

ஷில்லாங்: மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேகாலயாவில் நிறைய சுரங்கங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் குகைக்குள் இருந்த 14 பேரும் நீரில் சிக்கினார்கள். மேகாலயாவில் 18 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் சிக்கிய 14 ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களை மீட்க மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகிறார்கள்.

இதையடுத்து சுரங்கத்திற்குள் இருக்கும் தண்ணீரை ”போர்வெல்” போட்டு வெளியே எடுத்து வந்தனர். 100 அடியில் இருந்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. ஆனால் 70 ஆடி வரை இப்போதும் தண்ணீர் இருக்கிறது. அருகருகே இருக்கும் மற்ற சுரங்கங்கள் மூலம் இந்த சுரங்கத்திற்குள் தண்ணீர் தொடர்ந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version