உலகம்

புதிய சிக்கலில் மேகாலயா சுரங்க மீட்பு படையினர்.. உடைந்து விழும் உடல்கள்!

Published

on

ஷில்லாங்: மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் பணியாளர்களின் உடல்களை மீட்பதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. சுரங்கத்தில் இருக்கும் உடல்களை மீட்கும் போதே உடல்களின் பாகங்கள் உடைந்து விழுவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதம் முன் மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டது. அங்கு இருக்கும் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் கடந்த டிசம்பர் 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள். இதுவரை ஒருவர் கூட அங்கிருந்து மீட்கப்படவில்லை.

இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் Underwater Remotely Operated Vehicle எனப்படும் சிறிய ரோபோட் மோட்டார் வாகனம் மூலம் இவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version