இந்தியா

இந்தியாவின் முதல் பெண் ட்ரோன் ஆப்பரேட்டர்.. மருந்து பொருட்கள் டெலிவரி..!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்து வரும் நிலையில் இந்தியாவின் முதல் பெண் ட்ரோன் ஆபரேட்டர் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நிக் ஜாஸ்மின் என்பது தெரிய வந்துள்ளது.

மருந்து பொருட்களை டெலிவரி செய்யும் ட்ரோன்களை ஜாஸ்மின் ஆபரேட் செய்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாள் ஆண்டுகளாக இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்தும் வழக்கம் அதிகமாய் வருகிறது என்பதும் படப்பிடிப்பு நடத்தவும் பொருட்களை டெலிவரி செய்யவும் இந்த ட்ரோன்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்ததே.

குறிப்பாக மருந்து பொருட்களை கொண்டு செல்ல முடியாத பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் மிக எளிதாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது என்பதும் அந்த வகையில் தற்போது அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ட்ரோன்கள் மூலம் மருந்து மற்றும் மருந்து பொருட்களை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் ஆபரேட்டராக நிக் ஜாஸ்மின் என்ற பெண் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முதல் ட்ரோன் ஆப்ரேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜாஸ்மின் வடகிழக்கு மாநிலங்களில் கடினமான பகுதிகளில் மருத்துவ பொருட்களை டெலிவரி செய்யும் பணிகள் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர் ஒரு பாராகிளைடர் பயிற்சி பெற்ற பைலட் என்பதும் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் இவர் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’வானில் இருந்து மருத்துவம்’ என்ற திட்டத்தின் கீழ் தற்போது அவர் மருத்துவ நிவாரணம் மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் ட்ரோன் ஆபரேட்டராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜாஸ்மின் கூறிய போது ’நான் ஒரு பாராகிளைடர் பைலட் மற்றும் பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளதால் எனக்கு இந்த பணி எளிதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ட்ரோன் சேவையை உள்ளூர் செய்திகளில் தெரிந்து கொண்டு இந்த வேலைக்காக விண்ணப்பித்தேன் என்றும் தற்போது இந்த வேலையில் சேர்ந்து உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் மருந்துகளை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்யும் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் அதில் ஒரு பெண் ஆபரேட்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியதாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏர்லைன்ஸ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மையின் முதுகலை பட்டம் பெற்ற ஜாஸ்மின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ட்ரோன் ஆப்ரேட்டர் பணியை பெற்றார்.

ஆரம்பத்தில் ட்ரோன் முலம் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படும் விதம், எவ்வளவு எடையை கொண்டு செல்ல முடியும் போன்ற பயிற்சிகளில் அவர் ஈடுபட்டதாகவும் தற்போது ட்ரோன் ஆப்பரேட்டராக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version