இந்தியா

ஐபிஎஸ் அதிகாரி கனவு.. 16 அரசு வேலைகளை உதறிய திரிபாதி பட்.. முதல் முயற்சியிலேயே வெற்றி..!

Published

on

திரிபாதி பட்என்ற இளம் பெண்ணுக்கு அரசு வேலைகள் தேடி வந்த போதிலும் அதை அவர் நிராகரித்துவிட்டு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை அவர் நனவாக்கி உள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்தாலும் அந்த கனவு வெகு சிலருக்கே நனவாகிறது என்பது தெரிந்ததே. சிறுவயதிலிருந்தே ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு கண்டவர்களில் ஒருவர் திரிபாதி பட். இவர் பள்ளியில் படிக்கும்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கையால் பரிசு வாங்கியுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி அவர் கொடுத்த ஒரு கடிதத்தை படித்த பிறகு அவருக்கு ஐபிஎஸ் படிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவருக்கு அரசு வேலை தேடி வந்தது. ஆனால் அவர் 16 அரசு வேலைகளை புறந்தள்ளிவிட்டு முழு முயற்சியாக ஐபிஎஸ் தேர்வுக்கு தயாரானார். முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ் தேர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைத்து இரவும் பகலும் படித்து தேர்வுக்கு தயாரான நிலையில் அவர்கள் கனவு நினைவானது.

ஆம் 2013 ஆம் ஆண்டு அவர் ஐபிஎஸ் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்று 165 வது ரேங்க் ஆனார். திரிபாதி பட்தற்போது அவர் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபாதி பட் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் கைதேர்ந்தவர் என்பதும் தேசிய அளவிலான மாரத்தான் மற்றும் பூப்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் என்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version