இந்தியா

ஐஏஎஸ் தேர்வுக்காக நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்ட கனிஷ்க்.. அதன் பின் என்ன நடந்தது தெரியுமா?

Published

on

ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கனவு நினைவாகும் என்பது தெரிந்தது. முழுமையாக முயற்சி செய்து கடுமையாக உழைத்தால் மட்டுமே ஐஏஎஸ் என்ற கனவை நினைவாக்க முடியும் என்பதும் கடுமையான உழைப்பவர்களுக்கு ஐஏஎஸ் என்பது கைமேல் கிடைக்கும் பலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த கனிஷ்க் பட்டாச்சார்யா என்பவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவர் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானார் அவருக்கு என்ன நடந்தது என்பதை தற்போது பார்ப்போம்.

கனிஷாக் கட்டாரியா, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதில் அதிக கவனம் செலுத்தியதால், அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு வெளியேற முடிவு செய்து 2019ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானார்.

ஐஏஎஸ் கனிஷாக் கட்டாரியா ராஜஸ்தானில் உள்ள கோட்டாவை சேர்ந்தவர், மேலும் அவர் கோட்டாவின் செயின்ட் பால்ஸ் சீனியர் பிரிவில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். கனிஷாக் கட்டாரியா எப்பொழுதும் படிப்பில் சிறந்து விளங்கினார். அதனால் அவர் ஐஐடி ஜேஇஇ 2010 இல் 44வது ரேங்க் பெற்றார். அதன்பின்னர் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் மைனர்ஸ் அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸில் பி.டெக் படிப்பிற்காக பம்பாயில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர்ந்தார்.

படிப்பு முடிந்தவுடன் கனிஷாக் கட்டார்ரியா தென் கொரியாவில் புகழ்பெற்ற மின்னணு நிறுவனமான சாம்சங்கில் டேட்டா விஞ்ஞானியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இந்தியா திரும்பி பெங்களூருவில் ஒரு அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சேர்ந்தார். கனிஷாக் கட்டாரியா இந்த வேலையின் மூலம் நல்ல சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கனவு ஐஏஎஸ் என்பதால் கொஞ்சம் கூட யோசிக்காமல் நல்ல சம்பளம் கிடைத்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் தேர்வுக்கு தயார் செய்ய முடிவு செய்தார்.

கனிஷாக் கட்டாரியா டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சில மாதங்கள் படித்தார். பின்னர் அவர் தனது சொந்த ஊரான கோட்டா சென்று தனது சுய முயற்சியின் மூலம் தேர்வுக்கு தயாராகி தேர்வை எழுதினார். அவர் 2019 இல் அகில இந்திய ரேங்க் 1 ஐப் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானபோது அவரது கடின உழைப்பு இறுதியாக பலனளித்தது.

ஐஐடி-பம்பாய் முன்னாள் மாணவரான கனிஷக் கட்டாரியாவின் பயணம், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆவதற்குத் தயாராகும் நபர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Trending

Exit mobile version