இந்தியா

ரத்தன் டாடாவின் ‘டைட்டன்’ மேனேஜிங் டைரக்டர் இவர்தான்: சம்பளம் எத்தனை லட்சம் தெரியுமா?

Published

on

ரத்தம் டாடா அவர்களுக்கு சொந்தமான டைட்டன் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தம் டாடா அவர்களுக்கு சொந்தமான கடிகாரங்கள், நகைகள், சன் கிளாஸ்கள், வைரங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சிகே வெங்கட்ராமன் அவர்கள் உள்ளார். டாடாவின் குழுமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் பணியாற்றி வருகிறார் என்பதும் கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் டைட்டன் நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Zoya, CaratLane, Mia மற்றும் Tanishq ஆகிய பிராண்டுகள் மூலம் கடிகாரங்கள், கண்ணாடிகள், நகைகள் விற்பனை செய்யும் டைட்டான் நிறுவனம் சுமார் ஆயிரம் கடைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் அதன் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்நிறுவனத்தின் வருவாய் 20 ஆயிரத்து 602 கோடியாக இருந்தது என்றும் இந்நிறுவனத்தின் பங்குகள் வைத்திருக்கும் ரேகா ஜூன்ஜூன்வாலாவுக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி தந்துள்ளது என்பதன் குறிப்பிடத்தக்கது.

டைட்டன் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள ரேகா ஜூன்ஜூன்வாலா இரண்டு வாரங்களில் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பதும் அவரது கணவர் வாங்கி வைத்த இந்த நிறுவனத்தின் பங்குகள் அவருக்கு மிகப்பெரிய வருமானத்தை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரத்தன் டாடாவின் டைட்டன் நிறுவனத்தை நடத்தும் சிகே வெங்கட்ராமன் அவர்களுக்கு 62 வயது என்பதும் இவர் அகமதாபாத்தில் தனது எம்பிஏ படிப்பை முடித்து 1990 முதல் டைட்டன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாத்தா ஒரு வழக்கறிஞர் என்றும் அவரது தந்தை ஒரு ஹெச்ஆர் பணி செய்தவர் என்றும் அவரும் டாடா குழுமத்தில் தான் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டன் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர், நகை வணிகத்தின் சிஇஓ உள்பட பல்வேறு பதவியில் இருந்த சிகே வெங்கட்ராமன் கடின உழைப்பின் மூலம் தற்போது உயர் பதவிக்கு வந்து உள்ளார் என்பதும் தனக்கு கிடைத்த வேலை மிகச்சிறந்த வேலை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டைட்டன் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கே வெங்கட்ராமன் அவர்களது ஆண்டு சம்பளம் 6.99 கோடி ரூபாய் என்றும் அவரது மாத சம்பளம் 58 லட்சத்துக்கு மேல் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version