இந்தியா

சொந்த நிறுவனம் தொடங்கிய முன்னாள் டிசிஎஸ் ஊழியர்.. இன்று ரூ.28,000 கோடி சொத்து..!

Published

on

டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவர் சொந்த நிறுவனம் தொடங்கி தற்போது 28 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1952 ஆம் ஆண்டு கென்யாவில் பிறந்தவர் பாரத் தேசாய். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் இவரது தந்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் இந்தியாவில் படித்து வளர்ந்த இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு டாடாவின் டிசிஎஸ் நிறுவனத்தில் புரோக்ராம் பணிக்காக சேர்ந்தார். அதன் பிறகு அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு மாறினார். அங்கு அவர் கோடீஸ்வரர் தொழில் அதிபராக இருந்த நீரஜா என்பவரை சந்தித்த நிலையில் சில வருடங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐடி கன்சல்டிங் மற்றும் அவுட்போசிங் என்ற நிறுவனமான சிண்டெல் என்ற நிறுவனத்தை இருவரும் இணைந்து தொடங்கினர். பாரத் தேசாய் இந்நிறுவனத்தின் தலைவராகவும் அவரது மனைவி நீரஜா இந்த நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தார்.

வெறும் 2000 டாலர் முதலீட்டில் சிண்டெல் நிறுவனம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த நிறுவனம் முதல் வருடத்தில் மட்டுமே முப்பதாயிரம் டாலர் லாபம் பார்த்தது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு 900 மில்லியனுக்கும் அதிகமாக லாபம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவன்ம் 28000 கோடி மதிப்புள்ளது என்றும் பாரத் தேசாய் மற்றும் அவரது மனைவி நீரஜா ஆகிய இருவர் மட்டுமே 57% பங்குகளை வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

போர்ப்ஸ் நிறுவனத்தின் தகவலின்படி 2022 ஆம் ஆண்டின் பில்லியனர் பட்டியலில் இவரது பெயர் 187வது இடத்தில் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் டிசிஎஸ் ஊழியரான பாரத் தேசாய் அவர்கள் தற்போது 28000 கோடிக்கு சொந்தக்காரர் என்ற தகவல் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version