இந்தியா

மாணவியை காதலித்து திருமணம்.. ரூ.189000 கோடி நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர்..!

Published

on

ரூ.189000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் படித்த மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இணைய கல்வி நிறுவனங்களில் ஒன்றான பைஜூ நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரன் என்பவர் திவ்யா கோகுல்நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தங்கள் திருமணம் குறித்து சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிய பேசியபோது அவர்கள் தங்களுடைய காதல் தோன்றிய விதம் குறிப்பு வெளிப்படுத்தினர்.

பைஜூ நிறுவனத்தின் ரவீந்திரன் பல ஆடிட்டோரியங்களில் கல்வி கற்றுக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார். அப்போது அவரால் எந்த ஒரு குறிப்பிட்ட மாணவ மாணவியரையும் கவனிப்பது என்பது மிகவும் கடிதம். ஆனால் அப்படி ஒரு ஆடிட்டோரியத்தில் பயிற்சி அளித்து கொண்டிருந்தபோது திவ்யா என்ற மாணவி சில வித்தியாசமான கேள்விகளை கேட்டதால் அவர் ரவீந்திரனின் மனதை கவர்ந்தார்.

முதலில் இருவரும் அடிக்கடி சந்தித்து நட்பாக பழகிக் கொண்ட நிலையில் பின்னர் காதலிக்கவும் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தனது காதல் குறித்து ரவீந்திரன் கூறிய போது ’நான் கலந்து கொண்ட ஆடிட்டோரியங்களில் நிறைய கேள்விகளை திவ்யா கேட்பார் என்பதால் அவர் தனியாக கவனிக்கப்பட்டார் என்றும் ஆனால் அப்போது அவர் எனக்கு வாழ்க்கை துணையாக மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். முதலில் எங்களுக்குள் என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை, ஆனால் காதல் நன்றாக வேலை செய்தது, இதனால் நாங்கள் வாழ்க்கையில் இணைந்தோம்’ என்று திவ்யா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரவீந்திரன் திவ்யா தம்பதிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரவீந்திரனின் பைஜூஸ் நிறுவனத்தின் நிகர மதிப்பு தற்போது ஒரு லட்சத்து 89 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திரன் பைஜூ நிறுவனத்தின் சிஇஓ ஆகவும் திவ்யா இந்த நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version