சினிமா செய்திகள்

கைது செய்யப்படுகிறாரா மீராமிதுன்: தலைமறைவு என தகவல்

Published

on

நடிகை மீரா மிதுன் கைதுசெய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மீராமிதுன் பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த வீடியோவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து மீராமிதுனை போலீசார் கைது செய்து விசாரணை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மீராமிதுன் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version