சினிமா

அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் பிக் பாஸ் மீரா மிதுன்!

Published

on

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகளில் உலா வந்த மீரா தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஜோடியாக நடித்திருந்த மீரா பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்துகொண்டார். இதில் சேரன் மீது மீரா சுமத்திய ஒரு சர்ச்சைக்குறிய குற்றச்சாட்டால் பொதுமக்களின் ஆதரவை இழந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து மீரா மிதுன் சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்தில் தற்போது இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் இணைந்துள்ளார் மீரா மிதுன். இத்தகவலை மீரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version