தமிழ்நாடு

நேற்றைய அறிவிப்பை இன்று வாபஸ் பெற்றது மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்!

Published

on

தடுப்பூசி போடாதவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரக்கூடாது என்று நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் இன்று வாபஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோவில்கள், தியேட்டர்கள், மால்கள், மார்க்கெட்டுக்கள் ஆகியவற்றுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவின் அடிப்படையில் பல மாவட்ட கலெக்டர்கள் பொது இடங்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் செல்வதற்கு தடை என்ற அறிவிப்பு வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பில் 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய அறிவிப்பை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் இன்று வாபஸ் பெற்றது. தடுப்பூசி போடாத பக்தர்களும் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சற்று முன் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version