இந்தியா

இந்தியாவில் 3வது அலை தோன்றுமா? மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!

Published

on

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தோன்றுமா? ஒருவேளை தோன்றினாலும் அதன் காரணமாக பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் கணிப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா உள்பட பல நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தது மட்டுமின்றி பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் 2வது அலை உலகம் முழுவதும் தாக்கிய நிலையில் தற்போது மூன்றாவது அலை பல நாடுகளில் கோரமாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது அலை தோறி வருவதாகவும் இதன் காரணமாக ஒரு சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பாக நூறு கோடி மக்களுக்கும் மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதால் இந்தியாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி அதிகமாக செலுத்தி இருப்பதால் தினசரி பாதிப்பு குறைந்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் மூன்றாவது அலை தோன்ற வாய்ப்பில்லை என்றும் ஒருவேளை மூன்றாவது அலை வந்தாலும் மோசமான பாதிப்பு இருக்காது என்றும் உயிரிழப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Trending

Exit mobile version