தமிழ்நாடு

இன்று முதல் மருத்துவக்கல்லூரி திறப்பு: சில மாணவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த முறை முதல்வர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது ஆகஸ்ட் 16 முதல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதல் மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது. மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு நீண்ட இடைவேளைக்குப்பின் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியபோது ’மருத்துவ கல்லூரிகள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கி உள்ளன என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் பெரும்பாலான மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்றும் எல்லா மாணவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் பரிசோதனைகள் முடிவுகள் வரும்வரை சில மாணவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய சுகாதார செயலாளர், கடந்த இரண்டு வாரங்களாக இரண்டாயிரத்துக்குள் தான் தினசரி கொரோனா பாதிப்பு இருப்பதால் தமிழகத்தில் கொரனோ வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Trending

Exit mobile version