இந்தியா

இன்று முதல் ஐபிஎல் செய்திகளை வெளியிட மாட்டோம்: பிரபல ஊடகம் அறிவிப்பு!

Published

on

இன்று முதல் ஐபிஎல் செய்திகளை வெளியிட மாட்டோம் என முன்னணி ஊடகமொன்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதி இல்லாத நிலையும் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலையும் இருப்பதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்ப்பதற்கும், தடுப்பூசி பற்றாக்குறையை தீர்ப்பதற்கும், மத்திய மாநில அரசுகள் போராடி வருகிறது.

இந்த நிலையில் ஒரு பக்கம் கொத்துக்கொத்தாய் கொரோனாவுக்கு பலியாகி வருவதும், பலியானவர்களின் இறுதிச் சடங்குகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற நிலையில் இன்னொரு பக்கம் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த போட்டியின் செய்திகள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்று வருவது மிகவும் வருந்தத்தக்க ஒரு அம்சமாகவும் உள்ளது. இந்த நிலையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற செய்தி நிறுவனம் இன்று முதல் ஐபிஎல் செய்திகளை நாங்கள் வெளியிட மாட்டோம் என்றும் முழுக்க முழுக்க கோவிட் குறித்த செய்திகளை மட்டுமே வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை அறியவும் தான் ஊடகம் என்றும் இந்த கொரனோ அபாய நேரத்திலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வெளியிட மாட்டோம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக அந்நிறுவனத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version