தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் இனி இதையெல்லாம் எடுத்து செல்லக்கூடாது: அதிரடி தடையால் பயணிகள் அதிர்ச்சி

Published

on

சென்னை மெட்ரோ ரயிலில் இனி ஒரு சில பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இருப்பது சென்னை மெட்ரோ ரயில் என்பதும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்கு எந்த விதமான போக்குவரத்து இடையூறுமின்றி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதனால்தான் சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு ஆண்டும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த ரயில் பணி முடிந்து விட்டால் கிட்டத்தட்ட சென்னை நகர் முழுவதும் மெட்ரோ ரயிலில் செல்லும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக கடற்கரைக்கு செல்லும் மெட்ரோ ரயில் சென்னையில் தான் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென சென்னை மெட்ரோ ரயிலில் சமைக்கப்படாத இறைச்சி மீன் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் சமைக்கப்படாத பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்றும் அவ்வாறு கொண்டு செல்லும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உயிரிழந்த பறவைகள் விலங்குகள், உயிருள்ள பறவைகள் விலங்குகள் ஆகியவற்றையும் மெட்ரோவில் எடுத்துச் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் ஒரு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும் ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் மீன்களை எடுத்துச் சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் அதன் பின்னர் பெரும் சர்ச்சையான நிலையில் சரியாக பேக் செய்யப்பட்ட இறைச்சிகளை எடுத்துச் செல்லலாம் என பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை மெட்ரோ ரயிலிலும் முறையாக பேக் செய்யப்பட்ட இறைச்சிகளை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version