சினிமா செய்திகள்

இந்தியளவில் டிரெண்டான #Me–Vijay ஹேஷ்டேகுக்கு அர்த்தம் தெரியுமா?

Published

on

இந்தியளவில் திடீரென #Me-Vijay ட்விட்டரில் டிரெண்டானது. இதற்கு என்னுடைய குடும்பத்தில் நான் விஜய் ரசிகன் என்பது தான் அர்த்தம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, #Pray_for_Nesamani உலகளவில் டிரெண்டானது. அதற்கு அடுத்ததாக #Pray_for_MentalRanjith இந்தியளவில் டிரெண்டானது. இந்நிலையில், நேற்று முதல் தற்போது வரை இந்தியளவில் மீ விஜய் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தங்கள் குடும்பத்தில் அப்பா ரஜினி ரசிகர் அம்மா கமல் ரசிகர் அண்ணன் அஜித் ரசிகர் நான் விஜய் ரசிகர் என்பதை குறிக்கும் விதமாக பதிவிடப்பட்ட இந்த ஹேஷ்டேக், விஜய் ரசிகர்களின் வெறித்தனமான ஈடுபாட்டால் இந்தியளவில் டிரெண்டாகி உள்ளது.

வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, புதுசு புதுசாக டிரெண்ட் செய்ய ரசிகர்கள் தற்போது இருந்தே ஆயத்தமாகி விட்டனர்.

seithichurul

Trending

Exit mobile version