தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன்: வைகோ

Published

on

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் மே, ஜூன் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திமுக கூட்டணியான மதிமுக குறித்து பெரிதளவில் பேசப்படாமலே இருந்தது. கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தாமாக, மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்தன.

வரும் சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணி அமையலாம் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது அவ்வாறு மநகூ அமைய வாய்ப்பில்லை என்றும் திமுகவுடன் இணைந்து தனிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதிமுகவின் தனித்தன்மையைப் பாதுகாப்பதற்காக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக கூறினார். மேலும், அரசியலில் இருந்து விலகிய ரஜினி, யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார் என்று கருதுவதாகவும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version