தமிழ்நாடு

கையெழுத்தானது ஒப்பந்தம்: மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?

Published

on

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றாகிய மதிமுகவுக்கு தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் சற்றுமுன் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இரு தரப்பினரும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இன்று தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசியதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளை பங்கு கொள்வதாகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது’ என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் வைகோ மற்றும் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திமுக கூட்டணியில் மதிமுகவும் இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மட்டுமே இன்னும் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டியது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version