தமிழ்நாடு

கூண்டோடு காலியாகும் மதிமுக? பாஜக வலையில் வீழ்வார்களா?

Published

on

மதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பாஜக வலைவிரித்து உள்ளதாகவும் அந்த வலையில் அவர்கள் விழுவதற்கு மிகுந்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்ததற்கு சீனியர் மதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதிமுகவில் அதிருப்தியாக இருக்கும் சீனியர் தலைவர்கள் சுமார் 12 பேர்கள் மாவட்ட செயலாளர்கள் 5 பேர் கட்சி மாற தற்போது தயாராக இருப்பதாக கூறப்படுகிறது .

இவர்களின் முதல் ஆப்ஷன் திமுக என்றும் ஆனால் மதிமுக கூட்டணி கட்சியாக இருப்பதால் அந்த கட்சியின் தலைவர்களை சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது .

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாஜக தற்போது அந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் விரைவில் மதிமுகவில் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையலாம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version