உலகம்

இன்றைய வேலை நீக்க செய்தி.. வீட்டுக்கு அனுப்பப்படும் முன்னணி நிறுவனத்தின் 2000 ஊழியர்கள்..!

Published

on

ஊடகங்களில் தினந்தோறும் வேலை நீக்கம் குறித்த செய்திகள் வெளியாகி வருகிறது என்பதும் வேலை நீக்க செய்தி இல்லாத நாளை இல்லை என்ற அளவில் தினந்தோறும் ஏதாவது ஒரு நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்றும் 2000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மைக்ரோசாப்ட், அமேசான், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்பட பல சர்வதேச நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. பொருளாதார மந்த நிலை, வட்டி விகித உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுவனங்களின் லாபம் குறைந்து உள்ளதை அடுத்து சிக்கன நடவடிக்கைக்காக வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான McKinsey & Co என்ற நிறுவனம் 2000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. வேலைநீக்க நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் இழப்பீடை சமாளிக்க முடியும் என்றும் கடந்த 10 ஆண்டுகளில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வந்ததை அடுத்து நிலையற்ற தன்மை காரணமாக தற்போது வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது McKinsey & Co நிறுவனத்தில் 45 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களில் 2000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு தனித்தனியாக மெயில் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர் சேவை செய்து வரும் McKinsey & Co நிறுவனம் தற்போது மறு சீரமைபு நடவடிக்கையை செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்றும் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக கையாளும் நிபுணர்கள் சிலரை பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் McKinsey & Co நிறுவனம் 15 மில்லியன் டாலர் வருவாயை பதிவு செய்தது. மேலும் 2022-ல் அதைவிட அதிகமாக தான் வருமானம் பெற்றுள்ள நிலையிலும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version