தமிழ்நாடு

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மயில்சாமி! எந்த கட்சி சார்பில்?

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்பட மொத்தம் 5 கூட்டணிகள் போட்டியிடுகின்றன. தற்போது வேட்புமனுத்தாக்கல் தேதி தொடங்கி விட்டதை அடுத்து அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்

இந்த தேர்தலில் ஒரு சில திரையுலகினரும் பங்கேற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு பெரும் உதவிகளை அவர் விளம்பரமில்லாமல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது தன்னால் முடிந்த அளவுக்கு அந்த பகுதி மக்களுக்கு தினசரி உணவுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மயில்சாமி எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பதும், பல தொலைக்காட்சி விவாதங்களில் எம்ஜிஆரின் பெருமைகளை குறித்து அவர் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து விலகிய மயில்சாமி எந்த கட்சியிலும் சேராமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version