சினிமா செய்திகள்

’மயக்கம் என்ன’ பட நடிகைக்கு டும் டும் டும்!

Published

on

தனுஷின் மயக்கம் என்ன படத்தில் அறிமுகமான நடிகை ரிச்சா கங்கோபாத்யாயாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

தனுஷின் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி என இரு படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நெடுவாளி ரிச்சா கங்கோபாத்யாயா விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்தார்.

படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்த ரிச்சா, தற்போது, வெளிநாட்டுக் காரரான ஜோ என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், எங்களுக்கு தற்போது நிச்சயம் ஆகியுள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளோம் என காதலருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். வாழ்த்துகள் ரிச்சா!

seithichurul

Trending

Exit mobile version