இந்தியா

மே மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் தான் விடுமுறையா? முழு விபரங்கள்!

Published

on

நாளை மே மாதம் பிறக்க உள்ள நிலையில் மே மாதத்தில் சனி ஞாயிறு தவிர ஒரே ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறையாக அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு உள்ளது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே மாதம் மூன்றாம் தேதி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் நாடு முழுவதும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.மே 1ஆம் தேதி அரசு விடுமுறை என்றாலும் அன்றைய தினம் ஞாயிறு என்பது குறிப்பிடத்தக்கது. சனி ஞாயிறு தவிர மற்ற நாட்களில் விடுமுறை இல்லாத மாதமாக மே மாதம் உள்ளது.மே மாத விடுமுறை நாட்களின் முழு விபரங்கள் இதோ:

மே 1 – ஞாயிற்றுக்கிழமை – உழைப்பாளர் தின விடுமுறை

மே 2 – திங்கள்கிழமை – ரம்ஜான் பண்டிகை – கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் மட்டும்.

மே 3 – செவ்வாய்க்கிழமை – ரம்ஜான் பண்டிகை விடுமுறை

மே 8 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

மே 9 – திங்கள்கிழமை – ரவீந்திரநாத் தாக்கூர் பிறந்தநாள் விழா – மேற்கு வங்கம் மட்டும்.

மே 14 – சனிக்கிழமை – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை

மே 15 – ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை.

மே 16 – திங்கள்கிழமை – புத்த பூர்ணிமா – நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் விடுமுறை.

மே 22 – ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை

மே 28 – சனிக்கிழமை – நான்காவது சனிக்கிழமை விடுமுறை

மே 29 – ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை

 

seithichurul

Trending

Exit mobile version