வணிகம்

47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல், வோடாஃபோன்.. 37 ,அட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ! என்ன காரணம்?

Published

on

பார்தி ஏர்டெல் மற்றும் வோடோஃபோ ஐடியா நிறுவனங்கள் தனித்தனியாக மே மாதம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவில் புதியதாக 37 லட்சம் நபர்கள் இணைந்துள்ளனர் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என வயர்லெஸ் சாந்தாதார்கள் 0.5 சதவீதம் சரிந்துள்ளனர். இதற்கு கோவிட்-19 ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியது முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

டிராய் வெளியிட்டுள்ள தகவலின் படி மே மாதம் 5.61 லட்சம் மொபைல் போன் பயனர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நகர பகுதிகளில் 62.9 கோடியாக இருந்த மொபைல் சந்தாதார்களின் எண்ணிக்கை 62 கோடியாக சரிந்துள்ளது. கிராமப்புறங்களில் ஏப்ரல் மாதத்தில் 52 கோடியாக இருந்த சந்தாதார்களின் எண்ணிக்கை 52.3 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜியோவுக்கு அடுத்தபடியாக பிஎஸ்என்எல்-ல் 2,01,593 சந்தாதார்கள் புதியதாக இணைந்துள்ளனர். மே மாதம் 20.98 லட்சம் சந்தாதார்கள் மொபைல் எண்ணை வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் மே மாதம் சரிந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version